News

Thursday, 15 April 2021 05:07 PM , by: Daisy Rose Mary

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு உரம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உரங்கள் கையிருப்பு

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 3596 மெ.டன், டி.ஏ.பி 2444 மெ.டன், பொட்டாஷ் 1455 மெ.டன், காம்ப்ளக்ஸ் 7480 மெ.டன், தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து உர விற்பனை நிலையங்களிலும், 2020-21-ம் ஆண்டு விலையிலேயே தற்போதும் டி.ஏ.பி, பொட்டாஷ், சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்பளக்ஸ் உரங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என மத்திய உரத்துறை தெரிவித் துள்ளது.

எச்சரிக்கை

இதனால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலை உரங்களை விற்பனை முனையக் கருவி மூலம்விவசாயிகளின் ஆதார் எண் மூலமே விற்பனை செய்ய வேண்டும்.

உர விற்பனை தகவல்கள்

உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகை தவறாமல் பராமரிக்க வேண்டும். உர மூட்டைகளில் குறிப்பிடப் பட்டுள்ள அதிகபட்ச விலைக்கு மிகாமல் உரங்களை விற்பனை செய்ய வேண்டும். விவசாயி களுக்கு உரங்கள் விற்பனை செய்யும்போது உரிய ரசீது வழங்க வேண்டும். இருப்பு பதிவேட்டில் உரங்களின் இருப்பு விவரங்கள் சரியாக பராமரிக்க வேண்டும். அதிக விலைக்கு உரம் விற்றாலோ, உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபட்டாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதனை மீறுபவர்களின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

மேலும் படிக்க...

ஊட்டியில் கேரட் விலை குறைந்தது! கவலையில் விவசாயிகள்!

உரங்களின் விலை உயர்வு நிறுத்தி வைப்பு! பழைய விலைக்கே வாங்கி கொள்ளலாம்!

உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)