News

Wednesday, 09 December 2020 09:20 PM , by: KJ Staff

Credit : Hindu Tamil

டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்படாவிடில், தமிழ்நாட்டில் இருந்து விவசாய விளைபொருட்களை பிற மாநிலங்களுக்குக் கொண்டு செல்வதைத் தடுக்கும் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

டிராக்டர் பேரணி:

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை (Agriculture Laws) மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாகப் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், உய்யக்கொண்டான் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சி மாவட்டம் குழுமணியில் இன்று டிராக்டர் பேரணி (Tractor rally), ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு உய்யக்கொண்டான் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் டிபிகே பிரசன்னா வெங்கடேசன் (Venkatesan) தலைமை வகித்தார்.

விளைபொருட்கள் தடுத்து நிறுத்தம்:

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக, கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேரணியில் ஜல்லிக்கட்டுக் காளையொன்றும் அழைத்து வரப்பட்டது. பேரணியில் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்துப் பிரசன்னா வெங்கடேசன் கூறும்போது, "விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து டிராக்டர் பேரணி நடத்தப்பட்டது.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தும் பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு ஏற்படாவிட்டால் அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைந்து, ஆலோசனை நடத்தி, டெல்லிக்கு டிராக்டர் பேரணி நடத்தப்படும். அல்லது தமிழ்நாட்டில் இருந்து விவசாய விளைபொருட்களைப் (Products) பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்வதை எல்லைகளில் தடுத்து நிறுத்தும் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தியது தவறு! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புரெவி புயலால் 5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதம்: வேளாண் அமைச்சர் தகவல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)