மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும், ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் (Agricultural Associations) மீண்டும் அறிவித்துள்ளன. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டம்:
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி (Delhi) நோக்கிப் பேரணியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டம் தொடரும்:
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், வரும் டிசம்பர் 9 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில், 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு ரத்து (Cancel) செய்யும் வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் (Agricultural Associations) அறிவித்துள்ளன. குறைந்தபட்ச ஆதார விலை (Minimum resource price) தொடரும் என மத்திய அரசு உறுதிப்படுத்த நிலையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை, போராட்டத்தை தொடர்வது என விவசாய சங்கங்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கால்நடைகளுடன் போராட்டம்:
விவசாய சங்கத்தைச் சேர்ந்த 83 வயதான கலு ராம் (Kalu Ram), "என் பேத்தி உள்பட எங்கள் குடும்பத்தினர் அனைவரும், இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களது பிரச்சனை ஒன்று. அதேபோன்று நாங்கள் அனைவரும் ஒன்று தான். இதில் பாகுபாடு இல்லை. எங்கள் பிரச்சனைகளை, அரசு பரிசீலனை செய்யவில்லை என்றால், ராம்லீலா (Ramleela) மைதானத்தில் எங்கள் கால்நடைகளுடன் (Livestock) போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கூறினார்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு இலவச சட்ட உதவி! உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அறிவிப்பு!
மத்திய அரசின் இரு விருப்பத் திட்டங்கள்! முதலாவது விருப்பத் திட்டத்தை அனைத்து மாநிலங்களும் தேர்வு செய்தன!