வரும் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இருப்பினும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அமலில் ஊரடங்கு (Curfew in effect)
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பகுதி நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகளுடன் கூடியத் தளர்வு ஆகியவைக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. தற்போது, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
பள்ளிகள் திறப்பு (Opening of schools)
தமிழகத்தில் கொரோனாத் தொற்றுக் குறைந்து வருவதால் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளைக் கடைப்பிடித்துப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
திறப்பு ஏற்பாடுகள் தீவிரம்
இதையடுத்து நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காகப் பள்ளிகளைத் தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திட்டமிட்டபடி
வரும் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் செயல்படும்.
வருகைக் கட்டாயமில்லை
மாணவர்கள் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை. பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்கள் விருப்பப்பட்டால் பள்ளிக்குச் செல்லலாம். முடிந்தவர்கள் வரலாம். தீபாவளி முடிந்த பின் கூட வரலாம்; வராவிட்டாலும் பரவாயில்லை.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
வகுப்பறை பற்றாக்குறையை போக்க, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என, சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடக்கும். மாணவர்கள் பள்ளிக்கு வர போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரின் இந்த அறிவிப்பு, கொரோனா வைரஸ் தொற்று குறித்து அச்சத்தில் இருந்துப் பெற்றோருக்கு ஆறுதலை அளித்துள்ளது.
மேலும் படிக்க...
குழந்தைகளுக்கு ஆர்கானிக் துணி வகைகள்!
பூட்டிய வீடுகளை கண்காணிக்க மொபைல் ஆப்: கோவையில் அறிமுகம்!