News

Tuesday, 26 July 2022 10:38 PM , by: Elavarse Sivakumar

பள்ளிகளில் நிகழ்ந்த எதிர்பாராத சம்பவங்கள், ஆசிரியர்கள் மற்றும பள்ளி நிர்வாகங்கள் மீது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கியுள்ளன. இந்நிலையில், பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை கொண்டு வந்துள்ளது. இதில் முக்கியமாக, பள்ளி விழாக்களில் சினிமா பாடல்களை இசைக்கக் கூடாது, மரத்தடியில் பாடம் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இடம்பெற்றுள்ளன.

பள்ளி வளாகங்களில் நிகழ்ந்தப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், மாணவிகளின் மர்ம மரணங்கள், ஆசிரியர்களின் போராட்டங்கள் என்பன போன்ற பல்வேறு காரணங்களால் பள்ளிகள் மீதான, இமேஜ், பொதுமக்கள் மத்தியில் குறையும் நிலை உருவாகி உள்ளது. இந்த நிலையை மாற்றி, பள்ளிகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் பள்ளிக் கல்வித் துறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நகைகள் கூடாது

இவற்றில் முக்கியமாக, மாணவர்கள் மோதிரம், செயின், கையில் ஒயர் போன்றவற்றை அணிந்து கொண்டு பள்ளிக்கு வரக்கூடாது. மீறி இவற்றை அணிந்து வரும் மாணவர்களின் பெற்றோரை ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவழைத்து அறிவுறுத்த வேண்டும்.

சினிமா பாடல்

ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்துக்குள் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் எந்த விழாக்களிலும் சினிமா பாடல்கள் இசைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தண்டனை கூடாது

மாணவர்கள் பள்ளிக்கு செல்ஃபோனை கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது. மாணவர்களின் மனதை பாதிக்கும் விதத்தில் ஆசிரியர்கள் தண்டனைகளை வழங்கக் கூடாது. ஆசிரியர்கள் அனைவரும் பள்ளி துவங்கும் முன் பணிக்கு வந்துவிட வேண்டும். வகுப்பறையில் மொபைல் போனில் பேசும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

சொந்த வேலைக்கு

இலவச திட்டங்களுக்கென தனி பதிவேட்டை பள்ளிகளின் நிர்வாகம் பராமரிக்க வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலைகளுக்கு மாணவர்களை பயன்படுத்தக் கூடாது. மரத்தடிகளில் வகுப்புகள் நடத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி உத்தரவுகளை பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

ஆய்வுக் கூட்டம்

அண்மையில் நடைபெற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலான ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில் இந்த கட்டுப்பாடுகள் எல்லாம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க...

ரூ.2 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை- TNPSC அறிவிப்பு!

இதய ஆரோக்கியத்திற்கு தினமும் 3 அல்லது 4 முந்திரி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)