News

Friday, 18 December 2020 09:22 AM , by: Daisy Rose Mary

Credit : agrifarmideas

சொட்டுநீர் பாசனத்துக்கு குழி எடுப்பதற்கு ரூ.6 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதால், இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தில், தோட்டக்கலை பயிர்களுக்கு, சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதமும், இதர விவசாயிகளுக்கு, 75 சதவீதமும் மானியம் வழங்கப்படுகிறது. சொட்டுநீர் பாசனத்தில், தேவையான பிரதான குழாய்கள், துணை பிரதான குழாய்கள் பதிக்க, 1.5 முதல், 2 அடி அகலம், 2 அடி ஆழத்தில், குழி எடுக்க வேண்டி உள்ளது. 

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3,500 கோடி நிதியுதவி - அமைச்சரவை ஒப்புதல்!!

இதற்காக விவசாயிகள் சிரமப்பட்டு வரும் நிலையில், விவசாயிகளுக்கு உதவும் விதமாக, சொட்டு நீர் பாசனம் அமைக்க, குழி எடுப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. ஹெக்டேருக்கு, 3,000 ரூபாய் வீதம், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, 2 ஹெக்டேருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் ஈட்டித் தரும் சிறு தானியங்கள்!

சொட்டுநீர் பாசனத்துக்கு விண்ணப்பிக்கும் போதே, குழி எடுப்பதற்கான மானியத்துக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். சொட்டுநீர் பாசனத்தில் பயன் பெற, தோட்டக்கலைத்துறையில் பதிவு செய்து, விண்ணப்பிக்கலாம். இது தவிர, அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்திலும் விண்ணப்பம் அளிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மிளகாய் பொடியில், கழுதை மலம் கலப்படம்- மக்களே உஷார்!

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)