News

Friday, 12 August 2022 05:23 AM , by: R. Balakrishnan

Subsidy for Solar Power plant

வீடுகளுக்கு சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோருக்கு, மத்திய அரசு வழங்கும் மானியம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

சூரியசக்தி மின்சாரம் (Solar Power)

சூரியசக்தி மின்சாரம் அமைக்க, மத்திய அரசு மானியம் வழங்குகிறது. குறிப்பாக, வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க மத்திய அரசு 40 சதவீதம் மானியம் வழங்குகிறது. சூரியசக்தி மின்நிலையம் அமைக்க விரும்புவோர் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (டெடா) அல்லது தமிழக மின்வாரிய இணையதளங்களில் மானியம் பெற விண்ணப்பிக்கலாம். இந்த மானியத்தை தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மத்திய அரசிடம் இருந்து பெற்று பயனாளிகளுக்கு வழங்கும்.

இவ்வாறு வழங்கும்போது சில நேரங்களில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், சூரியசக்தி மின்னுற்பத்திக்கான நிலையம் அமைக்க மத்திய அரசு மானியம் பெற விரும்புவோர் solarrooftop.gov.in என்ற இணையதளத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

மானியம் (Subsidy)

அவ்வாறு விண்ணப்பிக்கும் போது ஆதார் எண், வங்கிக் கணக்குஎண், மின்நிலை திறன் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்களை பரிசீலனைசெய்து மானியத் தொகையை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாக செலுத்தும்என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

வருமான வரி செலுத்துவோர், இனி இந்த பென்சன் திட்டத்தில் சேர முடியாது!

நிலக்கடலை ஏலத்தில் நல்ல இலாபம்: விவசாயிகள் மகிழ்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)