மக்காச்சோளத்தைப் பயிர் செய்யும் விவசாயிகள், அதிக அளவில் எதிர்கொள்ளும் பிரச்சனை தான் படைப்புழுத் தாக்குதல். இதனை சமாளிக்க முடியாமல் திணறி வரும், விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில், வேளாண் துறை மானியம் ஒன்றை அறிவித்துள்ளது.
ரூபாய் 2000 மானியம்:
நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு, பபடைப்புழுவைக் கட்டுப்படுத்த, தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் (National Agricultural Development Program) கீழ் ஹெக்டேருக்கு ரூபாய் 2000 மானியம் (Subsidy) வழங்கப்படும் என அம்மாவட்ட வேளாண் இயக்குநர் அறிவித்துள்ளார். படைப்புழுவை கட்டுப்படுத்த, அதிக செலவை செய்து வரும் விவசாயிகளுக்கு இந்த மானியம் பேருதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
படைப்புழுவினால் பாதிப்பு:
படைப்புழுவின் தாக்கத்தால், மக்காச்சோளம் பாதிக்கப்பட்டு, மகசூல் (Yield) குறைந்து விடுகிறது. இதனால், மிகுந்த மன வருத்தத்தில் இருந்த விவசாயிகளுக்கு இம்மானிம், சிறு உதவியாக இருக்கும்.
பயன்பெறும் முறை:
மக்காச்சோளம் (Corn) பயிரிட்டுள்ள விவசாயிகள், இம்மானியத்தைப் பெற அருகில் உள்ள வேளாண் விரிவாக்கத்துறையை (Department of Agricultural Extension) தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. படைப்புழுவைக் கட்டுப்படுத்த, விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் இத்திட்டம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
நோய்த் தாக்கப்பட்ட தென்னை மரங்களை மறுநடவு செய்ய, ஒரு மரத்திற்கு 1000 ரூபாய் மானியம்!
நாமக்கல் மருத்துவக் கால்நடை பல்கலைகழகத்தில், வேலை வாய்ப்பு! விபரம் உள்ளே!