கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், காய்கறி மற்றும் பழங்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் இழப்புகளை தவிர்த்திடும் பொருட்டு போக்குவரத்து செலவில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆத்ம நிர்பார் பாரத் அபியான் (atmanirbhar bharat abhiyan) திட்டம் மூலம் காய்கறி மற்றும் பழங்களில் அறுவடைக்குப்பின் ஏற்படும் இழப்பு மற்றும் முழு அடைப்பு காலக்கட்டத்தில் ஏற்படும் விலை வீழ்ச்சியிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் பொருட்டு குறுகிய கால அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலம் வரும் 10.12.2020 வரை செயல்படுத்த பட உள்ளது. இத்திட்டத்தில், விளைபொருட்களின் உபரியினை, சந்தைப்படுத்தலுக்காக கொண்டு செல்ல ஏற்படும் போக்குவரத்து செலவினத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
மேலும், விளைபொருட்களை அதிகபட்சம் 3 மாத காலம் குளிர்பதன கிடங்கு உள்ளிட்ட சேமிப்பு கிடங்குகளில் சேமிப்பதற்கான கட்டணத்தில் 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மரவள்ளிக்கு மானியம் பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எந்தெந்த பயிர்கள்? (Crops)
அதேபோல், பழ வகைகளில் மா, வாழை, கொய்யா, பப்பாளி, சிட்ரஸ் பழங்கள், அன்னாசிப்பழம், மாதுளை, பலா. காய்கறிகள் வகைகளில் பீன்ஸ், பாகற்காய், கத்தரிக்காய், குடை மிளகாய், பச்சை மிளகாய், கேரட், காலி பிளவர், வெண்டைக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி ஆகியவை உள்ளன.
பயனாளிகள் யார்? (Beneficiary)
மேலும் விபரங்களுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புங்கன் செடிக்கு மானியம் (Subsidy)
இதனிடையே ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டார விவசாயிகளுக்கு, வேளாண் துறை சார்பில் புங்கன் செடி நடவு செய்ய எக்டருக்கு 500 செடி வீதம் இடைவெளி ஐந்துக்கு நான்கு மீட்டர் வீதம் புதியதாக நடவு செய்தால் ரூ 20,000 வழங்குகிறார்கள்.
இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர். கூடுதல் விபரங்களுக்கு வேளாண்மை உதவி அலுவலர்களை 9364647488 9789739379 , 9942918910, 9444210943 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
மேலும் படிக்க...
மானிய விலையில் நெல் விதைகள் - வாங்கிப் பயனடைய உடுமலை விவசாயிகளுக்கு அழைப்பு!