ராமநாதபுரத்தில் சோலார் மின்வேலி அமைக்க அதிகபட்சம் ரூ.2.18 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் மின்சார உபயோகத்தைக் குறைக்கவும், இலவச மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழக அரசு சூரிய ஒளியால் இயங்கும் சோலார் மின்வேலி அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்கள் பகுதிக்கு ஏற்றவாறு மின்வேலியினை 5, 7, 10 வரிசை அமைப்பை தேர்வு செய்து கொள்ளலாம்.
50% மானியம்
சூரிய மின்வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு 5 வரிசை ரூ.250, 7 வரிசைக்கு ரூ.350, 10 வரிசைக்கு ரூ.450 செலவாகும். தனிநபர் விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஏக்கர் அல்லது 1245 மீட்டர் மின்வேலி அமைக்க மானியம் வழங்கப்படும். சூரிய மின்வேலி அமைக்க செலவாகும் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.18 லட்சம் மானியம் வழங்கப்பட உள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது?
ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, கடலாடி, கமுதி, போகலுார், நயினார்கோவில் ஆகிய பகுதி விவசாயிகள் வேளாண்துறை அலுவலகத்தை அணுகி கூடுதல் தகவல்களை பெறலாம். அல்லது, வேளாண் உதவிசெயற்பொறியாளர் அலுவலக எண் - 98659 67063 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...