மீன் வளத்தைப் பெருக்கும் வகையில் மீன் வளர்ப்பில் ஈடுபடுவோருக்கு அதிகட்சமாக 40 ஆயிரம் ரூபாய் வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
-
தமிழ்நாட்டில் உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து மீனவ விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் (NADP) ன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
-
இத்திட்டத்தின்கீழ் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ விவசாயகள் மானியம் பெறலாம்.
-
இதன்படி மீனவர்கள் உங்களுக்கு சொந்தமான இடத்தில் பண்ணை குட்டை அமைத்து மரபணு மேம்படுத்தப்பட்ட கிப்ட் திலேப்பியா மீன் வளர்ப்பு செய்வதற்காக பண்ணை குட்டை அமைத்தல்(1000 செ.மீ), மீன் மீன்குஞ்சுகள், தீவனம் மற்றும் சுற்று வேலி அமைத்தல் ஆகிய செலவீனத்திற்கு மீன்வளத்துறை மூலம் மானியம் 40 சதவீதம் வழங்கப்படவுள்ளது.
-
அதில் ஒரு அலகிற்கு (1000 செ.மீ) அதிகபட்சம் ரூ.99,000 செலவினத்தில் 40 சதவீதம் மானியமாக ரூ. 39,600 வரை மான்யம் வழங்கப்படுகிறது.
-
விருப்பம் உள்ளவர்கள் முகவரி எண் 5வது மேற்கு குறுக்கு தெரு காந்தி நகர், காட்பாடி, வேலூர்-632006 என்ற விலாசத்தில் செயல்பட்டு வரும் வேலூர் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொலைப்பேசி வாயிலோ அல்லது நேரிலோ அணுகி தேவையான விவரங்களை பெற்று பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
-
விண்ணப்பங்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள். தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் 0416- 2240329.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஆதார் எண் இல்லாத விவசாயிகளுக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை!
PMKSY: பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தில் மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!