வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்க விரும்பினால் அரசு மானியம் வழங்கும் என்று சேலம் ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.
வேளாண் துறை மற்றும் தோட்டக்கலை துறையை மேம்படுத்த அரசு பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. இயற்கை விவசாயத்திற்கு மானியம், சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம், தோட்டக்கலை பயிர்களுக்கு மனியம் என அறிவித்து வருகிறது.
காய்கறி தோட்டம் அமைக்க மானியம்
இந்நிலையில் வீடுகளில் காய்கறி தோட்டம் அமைக்கவும் மானியம் வழங்கப்படவுள்ளது. இது குறித்து சேலம் ஆட்சியர் ராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் 2020 -21ன் படி அனைத்து வீடுகளிலும் காய்கறி தோட்டம் அமைத்து உற்பத்திக்கு தேவைப்படும் இடுபொருளான செடி வளர்ப்பு பைகள்,தேங்காய் நார், விதைகள், உயிர் உரங்களான அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரீயா, வேப்ப எண்ணெய் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு, 356 ரூபாய்க்கு விநியோகிக்கப்படும்.
தோட்டத்துக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க 1,400 ரூபாய் மானியம், உணரிகள் இல்லாத சொட்டு நீர் பாசனத்துக்கு, 320 ரூபாயம் மானியம் உண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.
தரமான காய்கறி விதைகள் உற்பத்திக்கு மானியம் - தோட்டக்கலைத் துறை!!
யாரை அணுகவேண்டும்?
ஆதார் அட்டை நகல், Passport size புகைப்படம் -2, வட்ட தோட்டக்கலை உதவி இயக்குனரை அணுக வேண்டும். மாவட்ட தோட்டக்கலை உதவி இயக்குனரை, 9600009853 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு முழு விபரம் பெறலாம். அல்லது adhmdc@gmail.com என்ற இணையவழி முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க மானியம் - திருநெல்வேலி ஆட்சியர் அழைப்பு!!
ஓமியோபதி மருந்தாளுநர் பட்டயப்படிப்பு மற்றும் நர்சிங் தெரபி பட்டயப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!!
இயற்கை விவசாயம்: சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை - தோட்டக்கலை துறை!!