மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 February, 2021 1:13 PM IST
Credit : Wikipedia

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

PSLVC-51

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு PSLVC-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

அமேசோனியா - 1 ( Amazonia - 1)

இதில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் 'அமேசோனியா - 1' செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

இந்த ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டுக்கு சொந்தமான அமேசானியா-1 செயற்கைக் கோள், இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர் சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

இத்துடன் அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்கள் என மொத்தம் 19 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், PSLVC-51, அமேசானியா -1 ஐ இன்று அதன் துல்லியமான சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக ஏவியது என்று அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

முதல் செயற்கைக்கோள் (The first satellite)

இந்த பணியில், இந்தியாவும், இஸ்ரோவும் பிரேசிலால் வடிவமைக்கப்பட்ட மற்றும் இயக்கப்படும் முதல் செயற்கைக்கோளை ஏவுவதில் பெருமை மற்றும் மகிழ்ச்சி அடைகின்றன. இந்த சாதனைக்காக அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இவ்வாறு இஸ்ரோ சிவன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

வரும் 3ம் தேதி வரை வாட்டி வதைக்கப் போகிறது வெயில்!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

பழங்குடியின விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி- TNAU ஏற்பாடு!

 

English Summary: Successful launch of PSLV C-51 rocket into space with agricultural satellite!
Published on: 28 February 2021, 01:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now