சென்னையில், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்திருப்பது, வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் தற்போது மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.
நிச்சயமற்ற நிலை
உக்ரைன்-ரஷ்யப் போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. போர் 150 நாட்களைக் கடந்துவிட்டநிலையில், போர் பதற்றம் காரணமாக, பெரும்பாலும் விலை அதிகரித்து வந்தது.
ரூ.320
இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையில் திடீர் சரிவு காணப்படுகிறது. கடந்த 9ம் தேதி 4,900ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 4,860 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் சரிந்து, ஒரு கிராமம் 4,860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் 3,8880 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நேற்றைய விலை
நேற்று,ஒரு கிராம் தங்கம் 4,893 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 39,144ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. திருமண சீசனில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, தங்க நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் படிக்க...