பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 20 January, 2022 12:23 PM IST
Sudden hike in gold and silver price

கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் எதிரொலியால் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சரிவு காணப்பட்ட நிலையில் தற்போது அதிரடி தீருப்பமாக தங்கத்தின் விலை உயர்வு காணப்படுகிறது, இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்திருப்பது குறிப்பிடதக்கது.

தமிழ்நாட்டு பெண்கள் மட்டுமல்லாமல் மொத்தமாக பெண்கள் என்றாலே தங்கத்தின் மீது அவர்கள் வைத்திருக்கும் மோகம் அதிகம். அந்த வகையில், தற்போது தங்கத்தில் வரும் புதிய டிசைன்ஸ் கலேக்சன்ஸ் ஆண்களையும் வசிகரிக்கிறது. தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தங்கம் வர்த்தகம் அதிகமாக இருந்து வருவது குறிப்பிடதக்கது.

இன்று ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,543 ஆக அதிகரித்து உள்ளது. நேற்று இதன் விலை 4,532 ரூபாயாக இருந்தது, குறிப்பிடதக்கது. அதேபோல, நேற்று 36,256 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 88 ரூபாய் அதிகரித்து 36,344 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.30 ஆக அதிகரித்திருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,500 அதிகரித்து 67,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வீட்டிலிருந்த படி தங்கம் விலை அறிய; (Find out the price of gold at home)

வீட்டிலிருந்தபடியே, தங்கத்தின் விலைகளை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, 8955664433 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுத்தால் போதும், உங்கள் தொலைபேசியில் ஒரு செய்தி வரும், அதில் சமீபத்திய கட்டணங்களை நீங்கள் பார்த்து பயனடையலாம்.

தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம் (Check the purity of the gold)

நீங்கள் இப்போது தங்கத்தின் தூய்மையை சரிபார்க்க விரும்பினால், இதற்காக அரசு, ஒரு செயலியை உருவாக்கியுள்ளது. அதன் பெயர் 'பிஐஎஸ் கேர் ஆப்' ஆகும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கத்தின் தூய்மையை சரிபார்க்கலாம். இந்த செயலி மூலம், தங்கத்தின் தூய்மையை மட்டுமல்லாமல் தங்கம் தொடர்பான புகாரையும் இதில் தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

தற்போது, தங்கம் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களையும் கவர்ந்து வருகிறது. ஆண்களுக்கான ஆபரணங்கள் என்ற வகையில், மோதிரம், சேயின், பிரேஸ்லேட் போன்றவற்றை வாங்க ஆண்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். திருமணம், நிச்சயதார்த்தம் என எல்லா வைபவங்களுக்கும், அவர்களும் தங்கத்தின் மூலம் ஜோலிக்க விரும்புகின்றனர்.

மேலும் படிக்க:

கிசான் கால்சேன்டர், விவசாயம் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க! முயற்சி

Hero Electric bikes:கூட்டணியில் இணைகிறது முன்னணி நிறுவனங்கள்! எவை?

English Summary: Sudden hike in gold and silver price. Details!
Published on: 20 January 2022, 12:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now