பேய் பயத்தால் கிராம மக்கள் தங்களுக்கு தாங்களே லாக்டவுன் போட்ட சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. இது குறித்த முழு விபரங்களை கீழே காணுங்கள்
கொரோனா வைரஸ் பரவலால் இந்த உலகமே லாக் டவுன்ல் இருந்தது நாம் எல்லோருக்கும் தெரியும். அப்பொழுது மக்கள் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்தனர். இப்பொழுது பெரும்பாலும் லாக்டவுன் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் ஒரே ஒரு கிராமம் மக்கள் மட்டும் பேய்க்கு பயந்து தங்களுக்கு தாங்களே லாக்டவுனை அறிவித்துக்கொண்டனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்து முழுமையாக காணலாம் வாருங்கள்
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் சுருபுஜிலி மண்டல் என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராம மக்கள் கடந்த ஏப் 17ம் தேதி முதல் பேய்க்கு பயந்து தங்களுக்கு தாங்களே லாக்டவுனை அறிவித்துக்கொண்டு யாரும் ஊரை விட்டு வெளியே வராமல் உள்ளேயே இருந்துள்ளனர்.
இது குறித்து விசாரிக்கும் போது இந்த கிராமத்திற்கு பேய் சாபம் இருப்பதாக அந்த மக்கள் நம்புகின்றனர். இதனால் கடந்த 20 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டு ஒரு பூஜை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 மாதங்களில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன். இதனால் தற்போது கிராமத்தை பேய் பிடித்துள்ளதாக நினைத்து மக்கள் எல்லோரும் பயந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏப் 17ம் தேதி அந்த கிராம மக்கள் ஒரு பூஜை ஒன்றை செய்துள்ளனர். அந்த பூஜை செய்து வீட்டிற்குள் சென்றவர்கள் யாரும் வீட்டை விட்டே பின்னர் வெளியே வராமல் தங்களுக்கு தாங்களே லாக்டவுனை அறிவித்துக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருந்துள்ளனர்.
இந்த தகவல் அப்பகுதி போலீசாருக்கு தெரியவந்தது போலீசார் அந்த கிராமத்திற்குள் நேரடியாக சென்று அங்குள்ள மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அந்த கிராமத்தில் லாக்டவுன் நீக்கப்பட்டது. தற்போது மக்கள் எல்லோரும் சகஜமாக அந்த கிராமத்திற்கு சென்று வருகின்றனர் 5 நாட்கள் அந்த கிராமமே மயானமாக காட்சியளித்தது. யாரும் தெரிருக்களுக்கு வராமல் பேய்க்கு பயந்து வீட்டிற்குள்ளேயே தங்கியுள்ளனர்.
இது எல்லாவற்றிற்கும் காரணம் கடந்த சில ஆண்டுகளாக சரியாக பூஜை நடக்கவில்லை என அந்த கிராம மக்கள் கருதுகின்றனர். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்தை கமெண்டில் சொல்லுங்கள்
மேலும் படிக்க