News

Wednesday, 07 April 2021 11:45 AM , by: Elavarse Sivakumar

Credit : KPBS

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் பதிவாகக்கூடும் என சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாட்டி வதைக்கும் வெப்பம் (Grabbing heat)

கோடை காலம் தொடங்கியது முதலே தமிழகம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் பகல் வேளைகளில் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


இதுதொடர்பாக வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)

07.04.21 மற்றும் 08.04.21

இன்றும் நாளையும், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வளி மண்டல சுழற்சி (Atmospheric circulation)

09.04.21 முதல் 11.04.21 வரை

குமரிக்கடல் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் உயரம் வரை வளி மண்டல சுழற்சி உருவாகக்கூடும்.

கோடை மழை (Summer rain)

இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னை (Chennai)

சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும்.

வெப்பநிலை (Temperature)

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.

மழைபதிவு

கடந்த 24 மணி நேரத்தில், ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning to fishermen)

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை

பகல் வேளைகளில் அதிக வெப்பம் கொளுத்தும் வாய்ப்பு உள்ளதால், வயதானவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோர் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் படிக்க...

விவசாயிகள் தங்கள் விவசாயத்தோடு தேனீ வளர்ப்பிலும் ஈடுபட வேண்டும் - மோடி உரை!!

பூக்காதச் செடிகளையும் பூக்கவைக்கும், ஆரஞ்சு தோல் பூச்சிக்கொல்லி!

கணக்கில்லா நன்மை தரும் கலப்பு பயிர் மற்றும் ஊடுபயிர் சாகுபடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)