இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 April, 2022 10:13 AM IST

நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி பொதுத் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெறுகின்றன. அதனால், இம்முறை கோடை விடுமுறை மிகக் குறைந்த நாட்களே விடப்படும் எனத் தெரிகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கடந்த 2 ஆண்டுகளாக தமிழக மக்களை வாட்டி வதைத்து வந்தது. தற்போது கொரோனா 3-வது அலை கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பாதிப்புக் குறைந்ததையடுத்து அண்மையில் பள்ளிகள் திறக்கப்பட்டு, தேர்வுக்காக மாணவர்கள் தயாராகி வருகின்றன. குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் கடந்த ஆண்டு செப்டம்பர் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச் மாதத்தில் தொடங்குவது வழக்கம். அதனைத்தொடர்ந்து 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வும் பிற வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும்.நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியதால், பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதிவரை நடைபெறுகிறது.அதன்படி, 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது.

தேர்வு அட்டவணை

அதேபோல், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 9-ந்தேதி ஆரம்பித்து 31-ந்தேதி வரையும், 10-ம் வகுப்புக்கு மே மாதம் 6-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரையிலும் நடக்க இருக்கிறது.இதுதவிர 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை ஆண்டு இறுதித்தேர்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மே 13-ந்தேதி கடைசி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2022-23) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13-ந்தேதி தொடங்கும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24-ந்தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் வெகுவாக குறைந்துள்ளது. பழைய முறையில் 40 நாட்களுக்கும் மேல் விடுமுறை கிடைக்கும் என இந்த தடவை எதிர்பார்க்க முடியாது.

மேலும் படிக்க...

தினமும் 3 டம்ளர் பால் மட்டும்- அதிகரித்தால் இத்தனைச் சிக்கல்கள்!

ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!

English Summary: Summer Holidays Decrease -School Education Notice
Published on: 02 April 2022, 10:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now