News

Monday, 25 April 2022 07:27 PM , by: R. Balakrishnan

Summer postal stamp Collection Camp

குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க இணைய வழியிலான கோடைகால முகாம், சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது. வரும் மே 2-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை காலை 10.30 மணி முதல் 12.45 மணி வரை 5 பிரிவுகளில் முகாம்கள் நடைபெற உள்ளன.

கடைசி நாள் (Last Date)

இதில் கலந்து கொள்வதற்கு இம்மாதம் 25-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இம்மாதம் 30-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள 8 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ரூ.250 பதிவு கட்டணமாக செலுத்தி இதில் பங்கேற்கலாம்.

பதிவு கட்டணத்தை காசோலையாகவோ, வரைவோலையாகவோ தலைமை தபால் அதிகாரி, அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், சென்னை- 600 002 என்ற பெயரில் எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தலைமை தபால் அதிகாரி, அண்ணாசாலை தலைமை தபால் நிலையம், சென்னை - 600 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இதுகுறித்து மேலும் விவரங்களை 044-28543199 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என, சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலைய அதிகாரி முரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

பிளஸ் 2 வரை வேளாண் படிப்பு: வேளாண் ஆசிரியர்கள் வலியுறுத்தல்!

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள் பெற ஸ்மார்ட் அட்டை அவசியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)