இரஷ்யா - உக்ரைன் போர் முடியும் வரை, சூரியகாந்தி எண்ணெய் வரத்து இருக்காது என்பதால், அதை மறந்து கடலை எண்ணெய்க்கு மாற, சேலம் மாவட்ட தாவர எண்ணெய் உற்பத்தியாளர், விற்பனையாளர்கள் சங்க தலைவர் சந்திரகாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். எண்ணெய் வரத்து குறைவால் தற்போதே எண்ணெய் விலை உச்சத்தில் உள்ளது. இந்நிலையில், சூரியகாந்தி எண்ணெய் அடுத்த இரு மாதங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சூரியகாந்தி எண்ணெய் (Sunflower Oil)
உலக நாடுகள் பயன்படுத்தும் சூரியகாந்தி எண்ணெயில் 80 சதவீதத்தை, உக்ரைன், ரஷ்யா நாடுகள் ஏற்றுமதி செய்யும் நிலையில், ரஷ்யா - உக்ரைன் போரால், அங்கிருந்து சூரியகாந்தி எண்ணெய் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. இதனால், மார்க்கெட்டில் தட்டுப்பாடு ஏற்பட்டு, பிப்ரவரி 20ல் லிட்டர் 140 ரூபாயாக இருந்த எண்ணெய் படிப்படியாக அதிகரித்து, தற்போது 185 - 190 ரூபாய் வரை விற்பனையாகிறது.
அதேநேரம், கடலை எண்ணெய் லிட்டர் 180- 185 ரூபாய்க்கு விற்கிறது. போர் முடியும் வரை, ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் வராது. அர்ஜென்டினாவில் ‛ஆர்டர்' கொடுத்தால், கப்பலில் இந்தியா வர 45 நாட்கள் முதல், இரண்டு மாதமாகும். அதனால், இன்னும் நான்கு மாதங்களுக்கு சூரியகாந்தி எண்ணெயை மக்கள் மறந்துவிட வேண்டியது தான்.
சூரியகாந்தி பயன்படுத்தியோர், கடலை எண்ணெய், தவிட்டு எண்ணெய், கடுகு எண்ணெய்க்கு மாறிக் கொள்ளலாம். சூரியகாந்தி எண்ணெய் வரத்து இல்லாததால், பாமாயில் விலை உயர்ந்து, நேற்று லிட்டர் 160 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும் படிக்க
கேன் குடிநீர் தரமாக இல்லையா? புகார் அளிக்க இந்த எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்!
போர் எதிரொலி: ரூ.4 கோடி மதிப்புள்ள தேயிலை குன்னூரில் தேக்கம்!