News

Saturday, 06 August 2022 01:20 PM , by: T. Vigneshwaran

Double hike in pension for sportspersons

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் தற்போது இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் தற்போது இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3000-ல் இருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு மானிய கோரிக்கை விவாதத்தின் போது, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் நலிந்த நிலையில் விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்பட்டு வரும், ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதற்கா பரிந்துரையை அரசுக்கு அனுப்பினார். இந்நிலையில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் அனுப்பிய பரிந்துரையை பரிசீலித்து, தற்போது நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படும் ஓய்வூதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் ஓய்வூதிய தொகையை ரூ.3000 யிலிருந்து ரூ.6000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் சாதனையை அங்கீகரித்து தமிழக அரசு ஓய்வூதியம் வழங்கி வருகிறது.

மேலும் படிக்க:

வாகன, வீட்டுக் கடன்கள் உயரும் அபாயம்! எச்சரிக்கை விடும் ரிசர்வ் வங்கி

5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)