மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 September, 2022 1:10 PM IST
Pension documents

ஓய்வுக்கால பணப்பலன் கோரும் ஊழியரின் விண்ணப்பத்துடன் காகித வடிவிலான ஊழியரின் பணிப்பதிவேடும் மாநில கணக்காயருக்கு இதுவரை அனுப்பப்பட்டு வந்தது. அவ்வாறு அனுப்பப்படும் பணிப் பதிவேட்டில் உள்ள பதிவுகளின் அடிப்படையில் தான் மாநில கணக்காயர் ஊழியர்களுக்கு சேர வேண்டிய பல்வேறு பணப்பலன்களை சேங்சன் செய்வார். ஊழியர் கருவூலம் மூலம் பணம் பெறுவார்.

இ-பணிப்பதிவேடு

ஓய்வுக்கால பணப்பலன்களுக்கு அடிப்படை ஆவணமான ஊழியரின் பணிப்பதிவேடும் தற்போது மின்மயமாக்கப்பட்டு தமிழக அரசின் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (IFHRMS) திட்ட சர்வரில் (Server) இடம் பெற்று விட்டது. இனி ஓய்வூதிய நடவடிக்கைகள் முழுவதும் IFHRMS வழியே தான் நடைபெறும். எனவே, இ-பணிப்பதிவேடுதான் இனி மாநிலக் கணக்காயருக்கு அனுப்பப்படும்.

காகித வடிவில் இருந்த பணிப்பதிவேடு ஸ்கேன் செய்யப்பட்டும், விடுபாடுகள் பூர்த்தி செய்யப்பட்டும் மிகுந்த கவனத்துடன் மின் பணிப்பதிவேடாக (e-service register) மாற்றப்பட்டுள்ளது. இருந்தாலும், ஓய்வுக்கால பணப்பலனில் பிழை ஏற்படக் கூடாது என்பதற்காக இ-பணிப் பதிவேட்டை மாநில கணக்காயருக்கு அனுப்பும் முன் காகிதப் பணிப்பதிவேட்டுடன் மின்பதிவேட்டு பதிவுகள் ஒப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

பணப்பலனுக்கான இரு காரணிகள்:

ஓய்வுக்கால பணப்பலனைக் கணக்கிட பணிக்காலம் (Length of service) மற்றும் ஓய்வு பெறும் தேதியில் பெறக்கூடிய கடைசி ஊதியம் (Last pay) ஆகிய இரண்டுமே முக்கியமான காரணிகள். ஊழியர் எவ்வளவு காலம் சம்பளம் பெற்றிருந்தாரோ, அதுவே பணிக்காலம் ஆகும்.
ஒவ்வொரு ஆறு மாதமும் சம்பளம் பெற்ற விவரம் பணிப் பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இதில் விடுபாடு இருக்கலாம். அதாவது, தற்போதைய அலுவலகத்திலேயே பணிக்காலம் பதிவு விடுபட்டிருந்தால், அதை உடனடியாக சரிசெய்து கொள்ளலாம். முந்தைய அலுவலக விடுபாடு எனில், ஊழியரே முயற்சி செய்து விடுபாட்டை சரிசெய்வது நலம். ஏனெனில், பணிக்காலத்தில் ஒரே ஒரு நாள் குறைவு ஏற்படுவதுகூட ஓய்வுக்காலப் பலனில் பல ஆயிரம் ரூபாயைக் குறைத்துவிடும். அது மட்டுமல்ல, வாழ்நாள் முழுவதும் பெறப் போகும் மாதாந்தர ஓய்வூதியமும் குறைவாக இருக்கும். எனவே, இதில் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.

பணிக்காலத்தை அதிகரிக்கலாம்:

தற்போது தமிழக அரசின் எந்தப் பதவியில் இருந்து ஒருவர் ஓய்வு பெற உள்ளாரோ, அந்தப் பதவியில் சேர்ந்தது முதல் அதே பதவியில் ஓய்வு பெறும் வரைக்குமான காலம் பணிக் காலமாகக் கணக்கிடப்படும். இத்துடன் உபரியாகக் கீழ்க்கண்ட பணிகள் இருப்பின் அவற்றையும் இப்போது சேர்த்துக்கொண்டு ஓய்வூதிய பலன்களைக் கணக்கிடலாம்.

கூடுதல் பணப்பலன்

  1. தமிழக அரசுப் பணிக்கு வருவதற்கு முன் மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி நிறுவனங்களில் தற்காலிக பணி செய்திருந்தால் அந்தப் பணிக்காலமும் தற்போதைய ஓய்வுக்கால பணப்பலனுக்கு கணக்கிடத் தகுதியானது.
  2. மத்திய அரசில் தற்காலிகப் பணிபுரிந்து மாநிலப் பணியில் நிரந்தரமாகி இருந்தால் மத்தியப் பணியையும் சேர்த்து ஓய்வுக்கால பலன் பெறலாம்.
  3. ராணுவத்தில் இருந்து, ராணுவப் பணிக்கு ஓய்வூதியம் பெறாதவர் ராணுவப் பணியைத் தமிழக அரசு பணியுடன் இணைக்கலாம்.
  4. தினக்கூலி அடிப்படையிலோ, சில்லறைச் செலவின பணியிலோ பணிபுரிந்த காலத்தில் 50% பணியைத் தற்போது சேர்த்துக்கொள்ளலாம்.

மேற்கண்டவற்றுள் ஒரு சிலருக்கு உள்ள சந்தேகம் என்னவென்றால், தற்காலிக பணியில் இருந்த பதவியும், நிரந்தரப் பணியும் ஒரே பதவியாக இருக்க வேண்டுமா என்பதுதான். அப்படி இல்லை. தற்காலிக பணியில் இளநிலை உதவியாளராக இருந்தவர், நிரந்தர ஆசிரியப் பணிக்கு அந்தத் தற்காலிக பணிக் காலத்தை எடுத்துக்கொள்ளலாம்.

தற்காலிக மருந்தாளுனர் (Pharmacist) ஆக இருந்தவர் தற்போது நிரந்தர உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றால் அந்தப் பணிக் காலத்தையும் நிரந்தரப் பணியுடன் சேர்த்து ஓய்வுக் கால பணப்பலன் பெறலாம்.

30 வயதுக்குமேல்:

மாவட்ட முன்சீப், சப் – மாஜிஸ்ட்ரேட், உயர்நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட நீதித் துறை பணிகளில் சேரும்போது வயது 30க்குமேல் இருக்கும் பட்சத்தில், பணியில் சேரும் போது 30க்குமேல் எத்தனை வயது அதிகமோ, அதைப் பணிக்காலமாக எடுத்துக் கொள்ளலாம் (அதிகபட்சம் 5 ஆண்டுகள்).

மேலும் படிக்க

அஞ்சல் அலுவலகத்தில் முதலீடு செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!

வருமான வரிக்கும் இனி ஜிஎஸ்டி வரி: புதிய கட்டணம் அறிவிப்பு..!

English Summary: Super news for government employees: pension documents to be computerized!
Published on: 04 September 2022, 01:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now