News

Sunday, 22 May 2022 10:06 PM , by: Elavarse Sivakumar

தமிழக அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் முதல் கட்டமாக ஒரு சில மாவட்டங்களில் மட்டும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தினசரி வகுப்புகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அரசு மேற்கொண்டத் துரித நடவடிக்கையால், கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதைத் தொடர்ந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற தொடங்கின. இந்த நேரத்தில் பொதுத் தேர்வுகள் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்குரிய முன்னேற்பாடுகள் நடைபெறத் தொடங்கின.

கோடை விடுமுறை

இதனையடுத்து கால அட்டவணை வெளியிடப்பட்டு அதன்படி தேர்வுகள் நடைபெற்றன. தற்போது 1 – 9 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடந்து முடிந்து 1 மாத காலம் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வியாண்டில் பள்ளிகள் ஜூன் 14ம் தேதி திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டி

அதே போல 10,11,12ம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு மே 31 தேதி வரை தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு இந்தக் கல்வியாண்டு முதல் காலைச் சிற்றுண்டி வழங்கப்படும்.

மேலும் படிக்க...

ரூ.1லட்சம் பென்சன் தரும் மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!

நீரிழிவு நோயை தடுக்கும் பழைய சோறு - யாரும் அறிந்திராத உண்மை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)