தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உணவுப் பொருட்கள் மிகவும் குறைவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகள் (Ration Shops)
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் வழங்கப்பட்டது. அத்துடன் அரசின் நலத்திட்டங்களும் ரேஷன் கார்டு வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.ரேஷன் கடைகள் தொடர்பாக நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இதில் குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக "நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை" என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ரேஷன் கடைகளில் புதிய திட்டம் அமலுக்கு வர உள்ளதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விரைவில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான வசதிகள் கொண்டு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை முதற்கட்டமாக செயல்படுத்த தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை தேர்வு செய்து, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பின்பு இத்திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார். இத்திட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் கிராமப்புறங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் அதிவேகமான இணைய சேவையை Wifi மூலமாக கொண்டு வர உள்ளதாக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை செயல்படுத்த முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் Wifi அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். இத்திட்டத்திற்கு அடுத்தபடியாக ரேஷன் கடைகளில் சிலிண்டர் விற்பனை செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க
பேருந்தில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 10% தள்ளுபடி: சூப்பர் ஆஃபர்!
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் அதிரடி உத்தரவு.!