News

Tuesday, 06 September 2022 07:18 AM , by: Elavarse Sivakumar

தமிழ் திரையுலகின் உச்சபட்ச நடிகரான சூப்பர் ஸ்டார், தமது ரசிகர்களை அவ்வப்போது மகிழ்ச்சியில் ஆழ்த்துவது வாடிக்கை. பின்னணியில் ஏதாவது ஒரு காரணம் இருக்கும். திரைப்படம் சார்ந்த ஒன்றாகவோ, அரசியல் சார்ந்ததாகவோ அந்தக் காரணம் இருக்கும். அந்த வகையில், ரஜினி விரைவில் ரசிகர்களை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலுக்கு முழுக்கு போட்டுள்ள ரஜினி, படங்களில் நடிப்பதிலும், ஆன்மிகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். மக்களவைத் தேர்தல் மற்றும் ஜெயிலர் பட வேலைகள் ஆரம்பமானதை முன்னிட்டு, ரஜினி குறித்த பேச்சு அதிகம் எழத் துவங்கியுள்ளது.

நெருங்கும் தேர்தல்

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ரஜினி, 'அரசியலுக்கு வரப்போவதில்லை' என திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு சில காலமே உள்ள நிலையில், கூட்டணி மற்றும் பிரபலங்களின் ஆதரவை பெறுவதில் கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. அதிலும், ரஜினி உள்ளிட்ட திரை நட்சத்திரங்களை, தங்கள் பக்கம் இழுப்பதிலும், அவர்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதிலும், பிஜேபியினர் முனைப்புக் காட்டி வருகின்றனர்.


மக்களிடம் இன்றும் நெருக்கமான தொடர்பு கொண்டவர் ரஜினி என, பிஜேபியினர் பேசத் துவங்கிஉள்ளனர். அதிலும், ரஜினி நடிக்கும் பட வேலை ஆரம்பமாகும்போதும், பட வெளியீட்டின் போதும், அவர் பற்றிய பேச்சு அதிகரிக்கும். அந்த வகையில், ஜெயிலர் பட வேலைகள் துவங்குவதால், தற்போது ரஜினி பற்றிய பேச்சு எழுந்துள்ளது. வரும் ஏப்ரலுக்குள், ரசிகர்களை சந்திக்க ரஜினி திட்டமிட்டுள்ளார் என, அவரது அண்ணன் சத்யநாராயணன் தெரிவித்துள்ளார்.

ஜெயிலர் படம்

முன்னதாக , 'கர்நாடக கவர்னராக ரஜினியை அறிவிக்கப் போகின்றனர்' என்ற பேச்சும் பரவி வருகிறது. இப்போதைக்கு, ரஜினியின் ஜெயிலர் படம் வெளியாகும் வரை, அவர் குறித்த பேச்சுகளுக்கு பஞ்சம் இருக்காது.


மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)