சென்னை வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இணை ஆணையாளர் ரம்யா பாரதி அறிவுறுத்தலின் பெயரில் துணை ஆணையாளர் பொறுப்பு சுந்தரவதனம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்த கும்பலை கைது செய்தனர்.
தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சதாம் உசேனை கைது செய்து புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து சதாம் உசேன் போதை மாத்திரைகளை வாங்கும் மருந்தகம் மற்றும் மருந்தகத்திற்கு மருந்துகளை சப்ளை செய்யும் நபர் என மொத்தம் 5 பேரை கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், ஆந்திரா மாநிலத்தைச் சார்ந்த சூலூர் பேட்டை மருந்தக உரிமையாளர் கோபிநாத் சிங் (40)முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்த மருந்து மொத்த விற்பனையாளர் பாண்டுரங்கன் (42) கொடுங்கையூர், கண்ணதாசன் நகரை சேர்ந்த தனியார் கம்பெனி சூப்பர்வைசர் சந்தோஷ் (23) முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்த மருந்தக ஊழியர் பாலசுப்பிரமணி (54) ஆகியோரை கைது செய்தனர்.
மேலும், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வலி மாத்திரைகளை போதை மாத்திரைகளாக மாற்றி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மேலும் போதை மாத்திரைகளை பயன்படுத்தும் ஆசாமிகள் பலரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான சதாம் உசேனிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் அவர்களிடம் இருந்த போதை மாத்திரைகள் ஐந்து செல்போன் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் புதுவண்ணாரப்பேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க..