அரசியல் கட்சிகள் இலவச வாக்குறுதி அளிக்கும் வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது. தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 24) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இலவசங்கள் (Freebies)
நீதிபதிகள் கூறுகையில், ‛தேர்தல் ஜனநாயகத்தில் உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. வேட்பாளர்களையும், கட்சிகளையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். வாக்காளர்கள் கட்சியின் செயல்திறனை பார்த்து ஓட்டளிக்கின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல்கட்சிகள் இலவச வாக்குறுதிகள் அறிவிப்பதை எதிர்க்கும் பிரச்னையை ஆராய நிபுணர் குழு அமைக்கலாம் எனக் கூறினர்.
மேலும், இந்த வழக்கில் விரிவான விசாரணை தேவை என்பதால் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
இனிவரும் தேர்தல்களில் இலவசங்கள் தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உச்சநீதிமன்றம் அமைந்துள்ள 3 பேர் கொண்ட நிபுணர் குழுவின் அறிக்கை வந்த பிறகு தான், இந்த வழக்கின் உண்மை நிலை தெரிய வரும்.
மேலும் படிக்க
அரசு பானமாக மாறுமா தென்னீரா பானம்? தென்னை விவசாயிகள் கோரிக்கை!