
தமிழகத்தில் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை நகர்ப்புறம் ஊர்புறம் என இரண்டு வகை உள்ளது. காஞ்சிபுரம்,தென்காசி, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, நெல்லை,விழுப்புரம் மாவட்டங்களிலும் புதிதாக பிரிக்கப்பட்ட வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மாவட்டங்கள் பல பிரிக்கப்பட்ட நிலையில் 10 புதிய மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை.கடந்த 2019-ல் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கடந்த ஆண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற நிலையில் விடுபட்ட உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தாமலேயே இருந்தது.
கொரோனா காரணமாக இந்த திட்டத்தை மாநில அளவிலான தேர்தல் ஆணையம் தள்ளி வைத்து விட்டது. அதனை தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுடன் மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலையும் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை காரணம் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கக்கூடாது என்றும் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் மேலும் 6 மாத காலம் அவகாசம் கேட்கப்பட்டது.இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்தது.
மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று கோரி திமுக மீண்டும் வழக்கு தொடர்ந்தது.அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர இதர 27 மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று உத்தரவிட்டது.
மேலும் படிக்க: