மருந்துகள் பல இரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. நோயை குணமாக்கும் இந்த மருந்துகள் அதிக வீரியம் கொண்டவை என்பதால், சாப்பிடும் முன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்வது புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பக்க விளைவுகளைத் தவிர்க்க இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
பிறருக்கு பரிந்துரைக்கக்கூடாது
மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை நீங்கள் பிறருக்கு பரிந்துரைக்கிறீர்கள் என்றால், இந்த பழக்கத்தை உடனே கைவிடுங்கள். ஒரு மருத்துவர் உங்களுக்கு காய்ச்சல் மற்றும் சளி உள்ளிட்டவற்றுக்காக சில மருந்துகளை மருத்துவர் எழுதிக் கொடுத்திருந்தால், அதே மருந்தை இன்னொருவருக்கு பரிந்துரைக்கக்கூடாது. அந்த நபருக்கு தாக்கம் வித்தியாசமாக இருக்கலாம். பிறர் பரிந்துரைத்த மாத்திரையையும் ஈங்கள் சாப்பிடக்கூடாது. வயது, உடலமைப்பை பொறுத்து மாறுபடும்.
மருந்து சாப்பிட வேண்டாம்
நீங்கள் வெறும் வயிற்றில் மருந்தை உட்கொள்ளக்கூடாது. வாயு பிரச்சனை உள்ளவர்களுக்கு வெறும் வயிற்றில் மருந்து சாப்பிட பரித்துரைக்கப்படுவார்கள். ஆனால், எல்லோருக்கும் இது பொருந்தாது என்பதால், வெறும் வயிற்றில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அன்டிபயாடிக் கவனம்
மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆன்டிபயாடிக் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்களாக எந்தவொரு ஆன்டிபயாடிக் மருந்துகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அதற்கு முன் மருத்துவரை ஆலோசனை செய்து கொள்வது அவசியம். ஆன்டிபயாடிக் எப்போது சாப்பிட வேண்டும் என்பதற்கு வழிமுறைகள் உள்ளன. தேவையற்ற மருந்துகளை எடுத்துக் கொண்டால், வயிறு பாதிக்கப்படும்.
வெவ்வேறு மருந்துகள்
ஒரே நேரத்தில் வெவ்வேறு பிரச்சனைகளுக்கான மருந்துகளை எடுத்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால் ஒவ்வொரு மருந்தும் ஒவ்வொரு ரியாக்ஷனைக் கொண்டவை. காய்ச்சலுடன் தைராய்டு மருந்தையும், சளி மற்றும் காய்ச்சலுடன் சர்க்கரை நோய்க்கான மருந்துகளையும் சாப்பிடுவார்கள். அவ்வாறு சாப்பிடக்கூடாது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். இந்த தவறை செய்யாதீர்கள். குறிப்பாக வலி நிவாரணி மருந்துகளை அதிகம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
மேலும் படிக்க
தமிழ்நாடு அரசு: தமிழகத்தில் இருமொழி கொள்கை செயல்படுத்தப்படும்