News

Wednesday, 19 December 2018 04:13 PM

 

சிக்குன் குன்யா காய்ச்சலுக்கு புளியங்கொட்டை சிறந்த மருந்து என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான ஆயுர்வேத மருந்தாக புளி பயன்படுத்தப்படுகிறது. சமூலம் என்று சொல்லக் கூடிய வகையில் புளியம்பழம், இலைகள், பட்டைகள் ஆகியவை என புளிய மரத்தின் சகல பகுதிகளுமே மருத்துவ சிகிச்சையில் பயன்படுகிறது. வயிறு தொடர்பான கோளாறுகளுக்கு சிறப்பான மருந்தாகவும் புளி இருக்கிறது.

இந்த வகையில் புளியங்கொட்டையில் இருக்கும் Lectin என்கிற புரதத்தால் சிக்குன் குன்யாவை குணப்படுத்த முடியும் என்று கண்டறியப்பட்டிருக்கிறது.
லெக்டின் புரதத்தில் வைரஸ் எதிர்ப்பு பொருள் அடங்கியிருப்பதால், சிக்குன்குன்யாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து பரி சோதிக்கப்பட்டது. அப்போது நோய்த்தொற்று 64 சதவிகிதம் அளவுக்கு குறைந்தது. இதேபோல சிக்குன் குன்யாவுக்குக் காரணமான RNA வைரஸும் 45 சதவிகிதம் அளவுக்குக் குறைந்தது.

எனவே, புளியங்கொட்டையைக் கொண்டு சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு மருந்து தயாரிக்கும் மூலப்பொருளை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்கான பேட்டன்ட் உரிமை கோரியும் விண்ணப்பித்துள்ளனர். சிக்குன்குன்யாவுக்கு வைரஸ் எதிர்ப்பு மருந்து இதுவரை இல்லாத நிலையில், லெக்டின் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.  

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)