News

Wednesday, 31 August 2022 08:24 PM , by: Elavarse Sivakumar

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கும் தமிழ் கட்டாயம் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் உருது, உருது, ஃபிரெஞ்சு படித்த மாணவர்கள், தமிழ் கற்க வேண்டியது கட்டாயமாகிறது. எனவே இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகிறது.

அதாவது இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ் கட்டாயம் என உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக உயர்கல்வித்துறை விடுத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை பட்டப்படிப்புகளில் 2-வது செமஸ்டரில் தமிழ் பாடம் கட்டாயம்.

விலக்கு

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகங்கள் தவிர மற்ற அனைத்திலும்,தமிழ் பாடத்திற்கான தேர்வுகளை நடத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகார்கள்

சில கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தமிழ் மொழி பாடத்தை நடத்தவில்லை என்று வந்துள்ள தகவலை அடுத்து உயர்கல்வித்துறை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் உருது, ஃபிரெஞ்சு படித்த மாணவர்கள், தமிழ் கற்க வேண்டியது கட்டாயமாகிறது. எனவே இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை உருவாகிறது. இதனால் தங்களது மேல்நிலைக்கல்வியில் தமிழ் பயிலாத மாணவர்கள், தங்களது இளநிலைப் பட்டப்படிப்பிற்காக வேறு மாநிலங்களுக்குச் செல்லும் சூழலும் உருவாகலாம். 

மேலும் படிக்க...

4 வயது குழந்தைகள் வேலைக்குத் தேவை - வித்தியாசமான விளம்பரம்!

பிள்ளையாருக்கு ரூ.316 கோடிக்கு காப்பீடு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)