தமிழகத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நடை பெற்றது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளுக்கு தேர்தலானது நடைபெற்றது. இந்த தேர்தலில் பல கட்சிகள் மாநில அளவிலும், தேசிய அளவிலும் போட்டியிட்டன.
தமிழகத்தை பொறுத்த வரை திராவிட கட்சிகள் அல்லது பிற கட்சிகள் வருவதற்கான வாய்ப்புகள் வெகு குறைவு. மேலும் இரு பெரு ஆளுமைகள் இல்லாது எதிர்கொள்ளும் முதல் தேர்தல்.
ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு அதிமுக வினுள் பல உட்கட்சி பூசல்கள் நடந்தன.எடப்பாடி அவர்களின் தலைமையினை ஏற்க விரும்பாத கட்சியினர்கள் தினகரன் கட்சியில் இணைந்தனர். கட்சிகள் பிளவு பட்டதும் இவர்களின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாகும்.
தி மு க வினை பொறுத்த வரை பழம் பெரும் தலைவர் கருணாநிதி அவர்கள் இல்லாமல் நடை பெற்ற தேர்தல் இது. எனினும் மு க ஸ்டாலின் அவர்கள் அக்கட்சியில் தலைமை பொறுப்பேற்று வெற்றி வாய்ப்பை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றார்.
தற்போதுள்ள நிலவர படி 6 தொகுதிகள் இழுபறி நிலையில் உள்ளன. ஆ தி மு க தொகுதிகளான ஆண்டிபட்டி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் தி மு க முன்னிலை வகிக்கிறது. பரமக்குடி, சூலூர் , சாத்தூர், ஆரூர் போன்ற தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் குறைவாகவே உள்ளதால் இழுபறி நீடிக்கிறது.
Anitha Jegadeesan