பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 7 July, 2021 10:09 AM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலைக் கல்லூரிகள் வரும் 12ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிச்சுமை (Financial burden)

கொரோனா வைரஸ் தொற்று இந்தியா முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி, மக்களை உயிர்பயத்தில் மூழ்க வைத்ததுடன், பொருளாதார ரீதியிலும் நெருக்கடிக்கு ஆளாக்கியது. இதனால் மக்கள் நிதிச்சுமைக்குள் சிக்க நேர்ந்தது.

ஊரடங்கு (Curfew)

அதேநேரத்தில், கொரோனாத் தொற்றுப்பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், மாநில அரசுகளும் இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, பல்வேறு தளர்வுகள் அறிவிப்பு என பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது.இதனால் தமிழகத்தில் ஓரளவுக்கு கொரோனாத் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

தடையற்றக் கல்வி (Unrestricted education)

ஆனால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கொரோனாத் தொற்று காலத்திலும், அதாவது 2020 ஏப்ரல் முதல் மாணவர்களுக்குத் தடையற்றக் கல்வியை வழங்கி வருகிறது.

சிறந்த கல்வி (Excellent education)

குறிப்பாக இணையவழி மூலம் கற்பித்தலும், பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி துறையில் சிறந்த கல்வியை மாணவர் சமுதாயத்திற்கு நல்குவதிலும் சிறந்து விளங்குகிறது.

தேர்வுகள் (Choices)

35 முதுநிலை மேற்படிப்பு மற்றும் 29 ஆராய்ச்சி படிப்புகளில் தேர்வுகளை இணையவழி மூலமாக வெற்றிகரமாக நடத்தி சாதனை படைத்துள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர்கள் கொரோனாப் பெருந்தொற்றுக் காலத்திலும், பாட நெறிப்பணிகளையும், மாணவர்களின் ஆராய்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வந்தனர்.

கல்லூரிகள் திறப்பு (Opening of Colleges)

இந்நிலையில் தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, வரும் 12.07.21 -ல் இருந்து ஆராய்ச்சிக் கூடங்களைத் திறந்து முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பு மாணவர்கள் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, சிறந்த வேலைவாய்ப்பினைப் பெறுவதற்கு ஏதுவாக, முதுகலைக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன.

பாதுகாப்பு விதிமுறைகள் (Safety Terms)

இதேபோல் அனைத்து வேளாண்மை உறுப்புக் கல்லூரிகளும், மாணவர்களைப் பாதுகாப்பான விதிமுறைகளை அதாவது சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் மற்றும் கைகளை அவ்வப்போது சோப்புப் போட்டுக் கழுவுதல் போன்றவற்றைப் பின்பற்றிச் செயல்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மின் விபத்துக்களை தடுக்கும் உயிர் காக்கும் சாதனத்தை வீடுகளில் பொருத்த உத்தரவு!

தொழில் முனைவோர் மாதிரி திட்டத்தின் மூலம் மீன்வளம்-நீர்வாழ் உயிரின வளர்ப்பிற்கு கடன் பெற விண்ணப்பிக்கலாம்!

English Summary: Tamil Nadu Agricultural University Post Graduate Colleges Reopen!
Published on: 07 July 2021, 10:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now