தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கான பொதுப்பிவு தரவரிசைப் பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் வெளியிட்டுள்ளார்.
தரவரிசைப் பட்டியல்
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு நடப்பாண்டுக்கான 4,390 இடங்ளை நிறப்ப இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இதற்கு மொத்தம் 48,820 மாணவர்கள் பல்வேறு இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்காக பதிவுசெய்த நிலையில் 31,410 மாணவர்கள் பொதுப்பிரிவிற்கு தகுதி பெற்று தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
முதல் 3 இடங்கள்
இதில் 199.0/200 கட்ஆஃப் மதிப்பெண் பெற்று திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பிரவீன்குமார் முதல் இடத்திலும் , 199.25 கட்ஆஃப் மதிப்பெண் பெற்று 2-ம் இடத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கிரிவாசன் இரண்டாம் இடத்திலும், நாமக்கல் மாணவி புஷ்கலா 199 கட்ஆஃப் மதிப்பெண் பெற்று 3ம் இடத்தையும் பெற்றனர். சிறப்பு இடஒதுக்கீடு தரவரிசை பட்டியல் மொத்த மாணவர்களில் 86.2 சதவீதம் பேர் வேளாண்மை பட்டப்படிப்பை முதல் விருப்ப பாடமாக தேர்வு செய்துள்ளனர்.
சிறப்பு இட ஒதுக்கீடுகளுக்கான தரவரிசை பட்டியல் 28-ம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை பிரிவுத் தலைவர் கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.
விவசாயப் பெண்களுக்கு வெள்ளாடுகள் & கறவை மாடுகள் வழங்கும் திட்டம்! - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல்!
தொடங்கும் பருவமழை - கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க தொடர்பு எண் அறிவிப்பு!