தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையால் தமிழக எல்லையோர பகுதிகளில் ஓரளவு மழை பெய்தது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் மழை பெய்தது. எனினும் மற்ற பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 5 தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்திருக்கிறது. எனவே காவேரி டெல்டா விவசாகிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருகிறார்கள். தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் பரவலாக மழை பெய்ய இருக்கின்றன என ஆய்வு மையம் கூறியிருகிறது.
Anitha Jegadeesan
Krishi Jagran