மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 June, 2020 3:07 PM IST
Image credit by: New indian express

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் வானிலை நிலவரம் குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மீனவர்களுக்கு எச்சரிக்கை

  • இன்றும் நாளையும் வடக்கு கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • வங்கக் கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • இன்று முதல் 21ஆம் தேதி வரை தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • இன்று முதல் 19ஆம் தேதி வரை மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • குளச்சல் கடல் பகுதி முதல் தனுஷ்கோடி வரை கடல் அலை ஒரு சில நேரங்களில் 3.0 மீ முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக் கூடும்.

  • இதனால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மழைப்பொழிவு

கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் வளத்தி பகுதியில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், விழுப்புரம் மாவட்டம் செம்மேடு, கோவை மாவட்டம் வால்பாறை, சின்னக்கல்லார் ஆகிய இடங்களில் தலா 3 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது.

 

சென்னை நிலவரம்

சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் இருக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சதமடித்த வெயில்

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரை விமான நிலையம் பகுதியில் அதிகபட்சமாக 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. சென்னை மீனம்பாக்கம் பகுதியில் 40.6 டிகிரி செல்சியஸ் அளவிலும், நுங்கம்பாக்கம் பகுதியில் 40.2 டிகிரி செல்சியஸ் என்ற அளவிலும் பதிவானது.

மேலும் படிக்க
தென்மேற்கு பருவமழை தீவிரம் கொப்பரை உற்பத்தி களங்கள் இடமாற்றம்!
கோடை காலத்தில் இந்த உணவு சாப்பிடுவதை தவிருங்கள்!
குறுவை சாகுபடிக்காகக் கல்லணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

English Summary: Tamil Nadu and Puducherry will receive rains in the next 48 hours, the chennai Meteorological Department
Published on: 17 June 2020, 03:00 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now