News

Wednesday, 01 May 2019 12:00 PM

ஃபனி புயல் வங்க கடலில் நிலை கொண்டுள்ளது. இப்புயலானது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து செல்கிறது. மே 3 ஆம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்த ஃபனி புயலானது தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக இருந்து தற்போது வலுப்பெற்று மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. புயலின் வேகம் குறைந்த பட்சமாக 170 km இல் இருந்து 180 Km வரை  இருக்கும் . அதிகபட்சமாக 195 Kmஇல் இருந்து 205 Km வரை செல்லும். அதிதீவிரமாக இருப்பதினால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 தமிழகம், ஆந்திர, ஒடிசா, மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்படும்  என எதிர்பார்க்க படுவதினால் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் குமரி மாவட்டம், மன்னர் வளைகுடா போன்ற பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஃபனி புயல் ஒடிசா அருகில் கரையை கடக்கும் என்பதினால், கரையோர மாவட்ட மக்களை பாதுகாப்பான இடத்தில இருக்கும் படி அறிவுறுத்த பட்டுள்ளனர்.    

இந்திய கப்பற்படை மற்றும் விமான படை தயார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேசிய பேரிடர் மேலாண்மை, மாநில குழுவுடன் தொடர்பில் உள்ளது. முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக முகாம்கள், உணவு, ரப்பர் படகுகள், ஹெலிஹாப்டர் போன்றவை தயார் நிலையில் உள்ளன. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த பட்டுள்ளது.

மத்திய அரசு  ஃபனி புயலினை எதிர்கொள்வதற்கு தேவையான நிதி உதவி வழங்கியுள்ளது. தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கு சுமார் 1086 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழகத்திற்கு மட்டும் 309 கோடி ஒதுக்கியுள்ளது.     

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)