திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாகவும், இத்திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்றும் தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் (Tamilnadu Budjet)
இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டின்போது, நிதியமைச்சர் தியாகராஜன், ‛மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை முதலாண்டில் செயல்படுத்த முடியாத நிலை இருக்கிறது. மகளிருக்கான உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்களை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது' எனக் குறிப்பிட்டார். இதனால், இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வரும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
உயர் கல்வி திட்டம் (Higher Education Scheme)
பட்ஜெட்டின்போது, மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித் திட்டமாக மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், ஆறு முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும். மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஆண்டுக்கு 5 லட்சம் பெண்கள் பயன்பெறுவார்கள். உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் திட்டமாக இது கருதப்படுகிறது.
மேலும் படிக்க