News

Thursday, 04 July 2019 03:49 PM

அமெரிக்கன் படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட  2 லட்சம் விவசாகிகளுக்கு நிதியுதவி அளிப்பதாக  சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை 80% அதிகமான சிறு மற்றும் குறு விவசாகிகள் மக்காச்சோளத்தை மானாவாரியாகவும், இறவை பயிராகவும், 3.5 லட்சம் ஹெக்டரில் சாகுபடி செய்யப்படுகிறது. படைப்புழு தாக்குதலால்  2 லட்சம் விவசாகிகள் பாதிப்படைந்துள்ளனர். இதற்காக அரசு ரூ. 186.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மக்காச்சோளம் குறைந்த தண்ணீரில் விளையும் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் தற்போது இதனை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். படைப்புழு தாக்குதலினால் மக்காச்சோளம் சாகுபடி வெகுவாக பாதித்தது. இதனால் மக்காச்சோள விவாசகிகள்  உரிய நிவாரணம் தரும்படி கோரிக்கை விடுத்தனர்.

தமிழகத்தில் மக்காச்சோளமனது 17 மாவட்டங்களில் பயிரிட்டு வருகின்றனர். பாதிக்க பட்ட விவசாகிகளுக்கு  கோடை உழவு குறித்த விழிப்புணர்வு, படை புழு தாக்குதல் குறித்த விழிப்புணர்வு கொடுக்க பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு பயிர் காப்பீடுத் திட்டத்தில் இது வரை சேராத விவசாயிகள் விரைவில் சேர்ந்து இழப்பீடுகளை தவிர்க்கும் படி கேட்டு கொண்டார்.

Anitha Jegadeesan
Krishi Jagran

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)