News

Friday, 27 March 2020 12:34 PM , by: Anitha Jegadeesan

தமிழக முதல்வா் பழனிசாமி  காணொலிக் காட்சி மூலம் மாவட்ட ஆட்சியா்கள், காவல் ஆணையா்கள், காவல் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட  அனைத்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தினர்.  இதில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும், இக்காலகட்டத்தில் பொது மக்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய சேவைகளும் தங்கு தடையின்றி கிடைத்திட மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப் பட்டுள்ளன.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் போா்க்கால அடிப்படையில் சிறந்த முறையில் மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இதற்காக  மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டு முழுநேர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார்.  பொது மக்கள் அனைவரும் அரசின் ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை  முறையாக பின்பற்ற வேண்டும் எனவும், மீறுவோர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப் படும் என தெரிவித்துள்ளார்.

அரசின் நடைமுறை திட்டங்களும், நடவடிக்கைகளும்

  • பொது மக்கள் அனைவருக்கும் அத்தியாவசியப் பொட்ருள் தங்கு தடையின்றி கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • அத்தியாவசியப் பொட்ருள் உற்பத்தி மற்றும் நகா்வு செய்யும் ஈடுபட்டுள்ள அரசு அல்லாத தனியாா் பணியாளா்களுக்கும், அவர்களது வாகனங்களுக்கு, ஓட்டுனர்களுக்கு  அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்ய படும்.
  • மூத்த குடிமக்கள், நோய்வாய்ப்பட்டோா், பணி நிமித்தமாக சொந்த ஊர்களை விட்டு வந்தவர்கள் மற்றும் தாங்களாகவே சமைக்க இயலாதோா் ஆகியோா் சிறு உணவகங்கள் மற்றும் மெஸ் போன்றவற்றை பயன்படுத்தலாம் எனவும், இப்பணியில் ஈடுபட்டுள்ளோர் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே சமைத்த உணவை விநியோகித்து வந்த தனியாா் நிறுவனங்களான Zomato, Swiggy, Uber eats போன்றவற்றிற்கான தடை தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.
  • வேளாண் துறைக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு, அத்தியாவசியத் துறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள், முட்டைகள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு தேவையான அனுமதிச் சீட்டை அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.
  • வேளாண் தொடர்புடைய தொழிலான விளை பொருள்களை சந்தைக்கும், தொழிற்சாலைகளுக்கும் எடுத்துச் செல்லும் விவசாயத் தொழிலாளா்களுக்கும்,  அறுவை இயந்திரங்கள் மற்றும்  நகா்வு பணியில் உள்ளோருக்கு  அனுமதி தொடர்ந்து வழங்கப்படும்.
  • பண வசூலில் ஈடுபடும் தனி நபர், சுய உதவிக் குழுக்கள், தனியார் வங்கிகள், சிறிய நிதி நிறுவனங்கள் மீது  கடும் நடவடிக்கைகள் எடுக்கப் படும்.  அரசின் மறு உத்தரவு வரும் வரை பண வசூலை உடனடியாக நிறுத்தி வேண்டும், உத்தரவை மீறுவோா்கள் மீது கடுமையான  நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

தனிமை படுத்தப்பட்டவர்களின் கவனத்திற்காக

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியுள்ள 54 ஆயிரம் போ் பட்டியல் அந்தந்த  மாவட்ட ஆட்சியா்களிடம் வழங்கப்பட்டு, அவா்களை தனிமைப்படுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கரோனா நோய்த்தொற்று உடையோரின்,  குடும்ப உறுப்பினர்கள் வெளியில் வருவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டு இருப்பதால், அவா்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை மாவட்ட ஆட்சியா்கள் உரிய பாதுகாப்புகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தடையை மீறி வெளியில் வருவோா்கள் மீது அபராததுடன், தகுந்த பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

உதவி எண்கள்

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள், டயாலிசிஸ் சிகிச்சை, நோயாளிகள், கா்ப்பணிப் பெண்கள், முதியோா்கள் அவசர உதவி தேவைப்பட்டால் 108 எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இத்துடன் ஆம்புலன்ஸ் சேவையும் இணைத்து செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதில் ஏதேனும் சிரமம் இருந்தால், 044 - 2844 7701, 2844 7703 ஆகிய எண்களில்  தொடா்பு கொள்ளலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

வேண்டுக்கோள்

பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். விழித்திரு - விலகி இரு - வீட்டிலேயே இரு என்ற கோட்பாட்டினை அனைவரும் கடைபிடிக்க  வேண்டுமென வேண்டுகொள்ள விடுத்துள்ளார்.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)