மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 July, 2021 7:09 AM IST

டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்து பேசுகிறார்.

கொரோனாத் தொற்று (Coronary infection)

சட்டசபைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து, தமிழகத்தின்  முதல்வராக, கடந்த மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்றார். அந்த காலகட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்திருந்த நிலையில், குடியரசுத்தலைவரை அவர் சந்திக்கவில்லை.

பிரதமருடன் சந்திப்பு (Meeting with the Prime Minister

கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

கோரிக்கை (Request)

அப்போது தமிழக நலன் சார்ந்தத் திட்டங்களை நிறைவேற்றத் தேவையான நிதியை ஒதுக்கித்தரவேண்டும் என்று வலியுறுத்தினார். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையையும் உடனே வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேகதாது அணை

இத்துடன், நீட் தேர்வை ரத்து செய்வது, மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் அப்போது வலியுறுத்தி பேசினார்.

2-வது முறை (2nd time)

இந்நிலையில், இரண்டாவது முறையாக நேற்று மாலை தனி விமானம் மூலம் தமிழக முதலமைச்சர் டெல்லி சென்றார். அவருக்கு தலைநகர் டெல்லியில், தமிழக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு (Meeting with the President)

தமது பயணத் திட்டத்தின்படி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12 மணியளவில் , குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை அவரது மாளிகையில், மரியாதை நிமித்தமாக சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது தலைமைச் செயலர் வெ.இறையன்பு , டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் உடனிருப்பர் எனத் தெரிகிறது. சந்திப்பு முடிந்த பின், அன்று இரவே சென்னை திரும்புகிறார்.

நீட் தேர்வு (Need to choose)

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருவது குறித்து எடுத்துரைப்பார். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் செயல்படவில்லை. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் நீட் தேர்வு எழுதினாலும் அவர்களால் அதிக மதிப்பெண்கள் எடுத்து மருத்துவ படிப்பில் சேர முடியாது. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாத் தடுப்பூசி (Coronavirus vaccine)

முக்கியமாக இந்த சந்திப்பின்போது மேகதாது அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்றும், இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்துவார்.
மேலும் தமிழக மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என தெரிகிறது.

நேரம் ஒதுக்கீடு (Allocation of time)

இதுகுறித்து அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், குடியரசுத் தலைவரைச் சந்திக்க ஏற்கனவே திட்டமிடப் பட்டிருந்தது.  இருப்பினும், கொரோனா காரணமாக டெல்லி பயணம் தள்ளிப் போடப்பட்டிருந்தது. இப்போது குடியரசுத் தலைவரைச் சந்திக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திங்கட்கிழமை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார்.

மேலும் படிக்க....

கொரோனா 3வது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம்: WHO எச்சரிக்கை!

கண்ணாடி இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் வாரண்டி ரத்து: ஐகோர்ட் அதிரடி

English Summary: Tamil Nadu Chief Minister MK Stalin meets the President in Delhi today!
Published on: 18 July 2021, 09:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now