News

Thursday, 01 July 2021 04:46 PM , by: Daisy Rose Mary

கொரோனா நிவாரண நிதியின் 2ம் தவணை இன்று முதல் வழங்கப்படவுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கொரோனா நிவாரண நிதியின் 2-ம் தவணை

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் திமுக அதிக பெரும்பான்மையும் ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கையின் முக்கிய அறிவிப்பாக 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையல், முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தனது நிவாரண நிதி ரூ.4 ஆயிரத்தில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை கடந்த மாதம் தொடங்கி வைத்தார்.

இதைதொடர்ந்து அனைவருக்கும் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது. இதைதொடர்ந்து, கொரோனா நிதியுதவியின் 2 வது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

14 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10 பேருக்கு நிவாரண நிதியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். மேலும், நாளை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பல திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.

  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டம்

  • கோயில்களில் வேலைபார்க்கும் பூசாரிகள்,பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி ,15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.

  • கொரோனா பாதிக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உயர்த்தப்பட்ட திட்டம்

  • திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி

  • மருத்துவ மற்றும் காவலர் குடும்பங்களுக்கு நிவாரணம் நிதி

உள்ளிட்ட திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.

ஜூன் 3 முதல் 6-ம் தேதி வரை கொரோனா தடுப்பூசி செலுத்துவது நிறுத்தப்படும்- தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தகவல்!

முழு ஊரடங்கு முடிவுக்கு வரும்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)