வைகை அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Tamil Nadu chief minister Edappadi Palaniswami) உத்தரவிட்டுள்ளார். இதனால் 45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு வைகை அணையிலிருந்து (Vaigai Dam) தண்ணீர் திறந்துவிட விவசாய பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயப் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, தேனி (Theni) மாவட்டம் கம்பம் (Cumbam) பள்ளத்தாக்கு பெரியாறு பிரதானக் கால்வாய் பாசனப் பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன பகுதியில் முதல் போக பாசன பரப்பான 45,041 ஏக்கர் நிலங்களுக்கு, நாளொன்றுக்கு 900 கனஅடி வீதம், 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும், மொத்தம் 120 நாட்களுக்கு 6739 மி.க. அடி தண்ணீரினை 31.8.2020 முதல் வைகை அணையிலிருந்து திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
45,041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்
இதனால் திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க...
Amazon pay-யில் LPG சிலிண்டர் புக் செய்தால் ரூ.50 தள்ளுபடி! ஆக.31வரை மட்டுமே!!
மீன்வளா்ப்பு திட்டங்களுக்கு 60% வரை மானியம் : பயனடைய அமைச்சர் அழைப்பு!!
கொரோனா நெருக்கடியிலும் காரீஃப் விதைப்பு அதிகரிப்பு!!