News

Wednesday, 01 May 2019 04:20 PM

தமிழக பள்ளி கல்வி துறை வரும் ஜூன் மாதம் முதல், அதாவது வரும்  கல்வி ஆண்டில்  பயோமெட்ரிக்  வருகை பதிவேட்டினை மாணவர்களுக்கு அறிமுக படுத்த உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் இம்முறை அறிமுகப்படுத்த படும்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பயோமெட்ரிக்  வருகை பதிவேட்டினை  ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இதில் பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லது அனைத்து பணியாளர்களும்  பயோமெட்ரிக் மூலம் தங்களின் வருகை பதிவினை உறுதி செய்ய வேண்டும் என சுற்றறிக்கையை அனுப்பி இருந்தது. பணியாளர்களின் வருகை பதிவினை நெறி படுத்தவும், கண்காணிக்கவும் இதனை கட்டாயமாக்கியது.

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய பயிற்சி,  நவீன வசதிகள், முறையான பராமரிப்பு  இல்லாததாலும் இதனை பெரும்பாலான பள்ளிகளில் செயல் படுத்த முடியவில்லை. தற்போது இதில் போதிய  மாற்றங்களை செய்து மீண்டும் செயல் படுத்த உள்ளது.  இதற்கான சுற்றறிக்கையை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 7000 அதிகமாக உள்ளன. ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பயிற்சி நிறைவடைந்த நிலையில் இந்த புதிய வருகை பதிவேட்டு முறையினை பள்ளி மாணவர்களுக்கு அறிமுக படுத்த உள்ளது. இது தொடர்பான வழிகாட்டுதலினை முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

 

 

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)