News

Wednesday, 13 July 2022 03:36 PM , by: R. Balakrishnan

Electricity Consumption

தமிழக மின் நுகர்வை பூர்த்தி செய்வதில், நீர், காற்றாலை, சூரிய சக்தியை உள்ளடக்கிய, பசுமை மின்சாரத்தின் பங்கு முதலிடத்தில் உள்ளது. தமிழக மின் நுகர்வு தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்டுகளாக உள்ளது. அதை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் அனல், நீர், எரிவாயு ஆகிய சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை.

மின் நுகர்வு (Electricity Consumption)

மின்சாரத் தேவைக்காக, மத்திய மின் நிலையங்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக மின் நுகர்வை பூர்த்தி செய்வதில், தினமும் மத்திய மின்சாரத்தின் பங்கு தான் முதலிடத்தில் உள்ளது. அதாவது, 12 கோடி யூனிட்களுக்கு மேல் இருக்கும். தற்போது, காற்றாலை சீசன் என்பதால், காற்றாலைகளில் இருந்து தினமும் அதிக மின்சாரம் கிடைக்கிறது. நேற்று முன்தினம் மின் நுகர்வு, 30.30 கோடி யூனிட்டுகளாக இருந்தது.

பசுமை மின்சாரம் (Green Electricity)

அதில், தனியர் நிறுவனங்கள் அமைத்துள்ள காற்றாலை மின்சாரத்தின் பங்கு 11.40 கோடி யூனிட்டுகள்; சூரியசக்தி, 1.82 கோடி யூனிட்டுகள்; மின் வாரியத்தின் நீர் மின்சாரம் 2.11 கோடி யூனிட்டுகள் என, பசுமை மின்சாரத்தின் பங்கு, 15.33 கோடி யூனிட்களுடன் முதலிடத்தில் இருந்தது.

மத்திய மின்சாரத்தின் பங்கு, 9.29 கோடி யூனிட்டுகள்; மின் வாரிய அனல் மின்சார பங்கு, 2.72 கோடி யூனிட்டுகள்; எரிவாயு பங்கு, 53 லட்சம் யூனிட்டுகளாகவும் இருந்தன. மீதி மின்சாரம், தனியார் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க

அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோலே இருக்காது: மத்திய மந்திரி சர்ச்சைப் பேச்சு!

10 மாதக் குழந்தைக்கு ரயில்வே வேலை: வரலாற்றில் இதுவே முதன்முறை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)