News

Friday, 02 April 2021 02:54 PM , by: Daisy Rose Mary

தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழகப் பகுதி நோக்கி வீசுவதால் இன்று முதல் வரும் 5ம் தேதி வரை தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

3 நாட்களுக்கு அனல்காற்று வீசும் 

இன்று முதல் வரும் 4ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஆறு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

வரும் 5ம் தேதி கரூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் , கிருஷ்ணகிரி, திண்டுக்கல் , திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பைவிட நான்கிலிருந்து ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் அறிவுரை 

இதன் காரணமாக ஒரு சில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும். பொதுமக்கள். விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் முற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வது மற்றும் ஊர்வலம் செல்வதைத் தவிர்க்குமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)