News

Sunday, 06 December 2020 02:08 PM , by: Daisy Rose Mary

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.

இதன்காரணமாக இன்றும் நாளையும் ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும்; ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த இரு தினங்களுக்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மழை பொழிவு - Rainfall

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக முத்துப்பேட்டை (திருவாரூர்) 10 செ மீ.,மகாபலிபுரம் செங்கல்பட்டு 7 செ மீ., குடவாசல் (திருவாரூர்), நன்னிலம் (திருவாரூர்) தலைஞாயிறு (நாகப்பட்டினம்) 6 செ மீ., திருத்துறைப்பூண்டி (திருவாரூர்), செய்யூர் (செங்கல்பட்டு), கொள்ளிடம் (நாகப்பட்டினம்), சோழவரம் (திருவள்ளூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), சிதம்பரம் (கடலூர்) 5 செ மீ. சோளிங்கநல்லூர் (சென்னை), செங்குன்றம் (திருவள்ளூர்), பேராவூரணி (தஞ்சாவூர்), நாகப்பட்டினம், தஞ்சாவூர், வேதாரண்யம் (நாகப்பட்டினம்), பூண்டி (திருவள்ளூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்), மன்னார்குடி (திருவாரூர்), மதுக்கூர் (தஞ்சாவூர்), நாகப்பட்டினம், திருவாரூர், செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்) 4 செ மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை - Warning for Fisherman 

இன்று (டிசம்பர் 06) குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்டிசம்பர் 06 ,07 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு - மாலத்தீவு பகுதி, கேரள கடலோர பகுதிகளில் மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்

கடல் அலை முன்னறிவிப்பு - Sea wave forecast

வட தமிழக கடலோர பகுதிகளில் கோடியக்கரை முதல் பழவேற்காடு வரை நாளை (டிசம்பர் 7) இரவு 11:30 மணி வரை கடல் அலை 1.4 முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும்.
தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை (டிசம்பர் 7) இரவு 11:30 மணி வரை கடல் அலை 1.5 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும்.

மேலும் படிக்க..

இயற்கை தேனீ வளர்ப்பாளர்கள் பக்கம் திரும்பிய வாடிக்கையாளர்கள் - தேனில் கலப்படத்தைக் கண்டுபிடிக்க எளிய டிப்ஸ்!

தொடரும் கனமழை : வெள்ளத்தில் மிதக்கும் டெல்டா மாவட்டங்கள்!!



எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)