தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு, பன்றிக்காய்ச்சலால் இதுவரை 1,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜூலை வரை தமிழகத்தில் 1,200 க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலாலும், மற்றும் 435 பேர் பன்றிகாய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது, டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்நோய் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.
மக்களும் தங்களது சுற்றுப்புறத்தை சுத்தமாகவும், தண்ணீர் தேங்கும் இடங்கள் டயர், சிமெண்ட் தொட்டி, தேங்காய் ஓடுகள், மட்டைகள் ஆகிய இடங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இதேபோல் மக்கள் தங்கள் கைகள், கால்களை அவ்வப்போது கழுவி சுத்தமாக வைத்துக்கொண்டால் பன்றிக்காய்ச்சல் பாதிப்பதை தடுக்கலாம். இவ்வாறு செய்தாலே 90 சதவீதம் பாதிப்பை தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
K.Sakthipriya
Krishi Jagran