வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுகவிற்கு விவசாயிகள் ஆதரவு
சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் தமிழ்நாடு மாநில விவசாயிகள் சங்க தலைவர் டாக்டர் மஞ்சினி ஏ.கே.இராமசாமி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினர் முதல்வரை சந்தித்தனர். இச்சந்திப்பின்போது, விவசாயிகள் நலனுக்காக கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள், சலுகைகளுக்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதனை முதல்வர் எடப்பாடி பழனிசாம் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
விவசாயிகளின் வளர்ச்சிக்கு முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளர். மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல் ஏற்பட்டபோது அதற்கான நிவாரண நடவடிக்கைகளை முதல்வர் உடனடியாக மேற்கொண்டார், மேலும் குடிமராமத்து திட்டம் மூலம் நீர் ஆதாரங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. எனவே, தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு எங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.
விவசாயியான முதல்வரே மீண்டும் அட்சிக்கு வர வேண்டும்
விவசாயிகளின் நலனுக்காக காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம், காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டம் ஆகியவற்றை முதல்வர் செயல்படுத்த வேண்டும். விவசாயியான முதல்வர் பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முதல்வருடனான இந்த சந்திப்பில் தமிழக கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கோவிந்தராஜ், தமிழக மரவள்ளி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலம், தமிழக விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன், தேசிய நதிநீர் இணைப்பு கூட்டமைப்புத் தலைவர் சண்முகம், தமிழக பருத்தி உற்பத்தியாளர்கள் சங் கத் தலைவர் பொன்னுவேல், தென்னை மற்றும் பனை பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் ஈரோடு நல்லு சாமி, பூ உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சண்முகம், சேலம் மாவட்ட விவசாயிகள் சங்க கூட்ட மைப்புத் தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.