News

Saturday, 18 May 2019 05:58 PM

குருவை சாகுபடி செய்த விவசாய நிலத்தில் கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாயினை பதித்து வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி அப்பகுதி விவசாக்கிகள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குருவை சாகுபடி செய்த விவசாய நிலத்தில் குழாய் பதித்து இயற்கை எரிவாயு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது. இக்குழாய் பதிப்பு நான்கு மாவட்டங்கள்  வழியாக செல்ல உள்ளது. குழாய் எடுத்து செல்லும் பகுதிகளில் எல்லாம்  குருவை சாகுபடி நடந்து கொண்டு இருப்பதால் விவசாகிகள் எல்லாம் செய்வதறியாது உள்ளனர்.

பெரும்பாலான நிலங்களில் குருவை சாகுபடி தொடங்கி உள்ளன. சில நிலங்களில் குருவை சற்று வளர்ந்துள்ளன. ஒரு சில நிலங்களில் நடவு பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் கனரக வாகனங்களுடன் விளை நிலங்களில் நுழைத்து குழாய் பாதிக்கும் பணியினை செய்து வருகின்றனர், விளை நிலங்கள் எல்லாம் புகை முட்டமாக காட்சி அளிக்கிறது.

எதிர்ப்பு தெரிவிக்கும் விவாசகிகளை காவல் துறையினர் கைது செய்து , அச்சுறுத்தி வருகிறார்கள். விவசாயம் என்பது தமிழகத்தில் நலிந்து வரும் நிலையில் இது போன்ற திட்டங்கள் மேலும் பின்னடைவை தரும். குறைந்த அளவிலான மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

போதிய நீர் இல்லாமல் விளை நிலங்கள் எல்லாம் வீணாகி கொண்டிருக்கும் போது வெகு சிலரே  விவசாயதில் ஈடுபட்டு இருக்கின்றனர். அரசு அவர்களின் குறைகளை செவிமடுக்க வேண்டும். இத்திட்டத்தினை கை விட வேண்டுமென நாமும் கோரிக்கை வைப்போம். 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)